வரலாறு மிக முக்கியம்.
ஒவ்வொருவரின், ஒவ்வொன்றின் வரலாறும் மிக அதி முக்கியத்துவம் வாய்ந்தது.
குருக்கள் என்கிற முறையில் குருக்கள் வரலாறும் அதே சமயத்தில் தமிழர்கள் என்கிற முறையில் தமிழக வரலாறும் நமக்குத் தெரிய வேண்டியது அவசியம்.
தமிழர்களின் வரலாற்றில் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் – ஒன்று சாதீயம் மற்றொன்று இனம்.
குருக்களின் வரலாறு என்கிற நிலையில் இரண்டு: ஒன்று இறையியல் மற்றொன்று மனத்துறவு.
இந்த பகுதியில் வரும் சில குறிப்புகள் இவைகளை ஒட்டியே இருக்கும் என நம்புகிறேன்.
இங்கே எழுதப்படுகிறவைகள் காத்திரமான கட்டுரைகள் அல்ல. நாளடைவில் அதற்கான இலக்கை நோக்கிச் செல்லலாம்.
காத்திரமான கட்டுரைகள் இல்லையென்றால் எதற்காக இந்த சிறு சுட்டிகளை வெளியிட வேண்டும் என்று நினைக்கலாம். நமது எண்ணங்களை பதிவு செய்தால்தான் அடுத்த தலைமுறையை நமது கருத்துக்கள் சென்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இல்லையெனில் எழுதுகிறவர்களின் கருத்துக்கள் மட்டுமே உண்மை என்பது போல ஆகிவிடும்.
“லத்தீன் கிறித்தவர்கள் மற்றவர்களை அடக்கி ஆழ்கிறார்கள்” என்பது உண்மையாகவே கருதப்படலாம்.
“சாதியக் கொடுமைகள் நம்மில் இல்லை என்கிற கட்டுரைகள் உண்மை” என்பது போலவும் அல்லது “சமத்துவ முயற்சிகளே இல்லை அல்லது போராட்டக் கூறுகளே இல்லை” என்பது கூட உண்மை என்றாகலாம்.
எனவே பதிவு அவசியம். கருத்தளவில் பேசும் சுதந்திரம் இருந்தால் தான் செயலளவில் பணியாற்றும் வீரியம் வரும்.