· “இவர்களுல் சிலர் பொறாமையாலும் போட்டி மனப்பான்மையாலும் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்; வேறு சிலரோ நல்ல மனத்தோடு அறிவிக்கின்றனர்” [ஒன்று: பதினைந்து].
பணியாளர்களின் நோக்கம் கிறிஸ்துவை அறிவிப்பதே – அறிவிப்பது கிறிஸ்துவைப் பற்றிய அறிவைக் கொடுப்பது மட்டுமல்ல – அவரது நற்செய்தியின் கருவை வாழ்விக்கச் செய்வது. அது நல்ல மனத்தோடு பணியாற்றும் போதுதான் உண்மையான கிறிஸ்துவை அறிவிக்க முடியும் [பவுல் ஏன் இப்படிச் சொல்கிறார் என்பதை இறையிலாளர்கள்தான் சொல்ல வேண்டும்] நம் மனதெப்படியோ அப்படித்தான் நமது செய்தியும் இருக்கும்.
· “மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் நேர்மையானதன்று. ... அதனாலென்ன ? அவர்களுடைய நோக்கம். வஞ்சகமானதோ, நேர்மையானதோ; எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகின்றார். அது எனக்கு மகிழ்ச்சியே ஆம், இனியும் மகிழ்ச்சியாகவே இருக்கும்” [ஒன்று: பதினெட்டு].
கட்சி மனப்பான்மையாலும் பொறாமையினாலும் கிறிஸ்துவை நாம் அறிவிக்க முடியாது என்பதையும் நாம் உணர்வது நல்லது. நாடு பிடிக்கச் சென்றவர்கள் கூட கிறிஸ்துவை அறிவித்தார்கள் அதற்காக அதில் பெருமைப் பட முடியுமா என்பது புரியவில்லை. வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக கிறிஸ்துவை அறிவிப்பதும் – வெறும் கிறிஸ்துவைப் பற்றி மட்டும் அறிவித்து விட்டு அவரின் விடுதலைப் போதனையை மறந்து இருப்பது இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பவுலுக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியாக இருக்கலாம்.
· “போட்டி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்.கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக” [இரண்டு: மூன்று – ஐந்து].
எது எப்படி இருப்பினும் நற்செய்தி அறிவிப்பவர்கள் தங்களுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பவுல் தவறாது குறிப்பிடுகின்றார். நமது மன நிலையகன்று இயேசுவில் இருந்த மனநிலை நமக்கு வேண்டும் என்பது நமது நினைவுக்கு நல்லது.